Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவர் விடுதலை!

விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவர் விடுதலை!

3 years ago
in செய்திகள்

2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இதன்படி பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போது இலங்கையில் பணியாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி முகமட் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவீசி, அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்டார் என அழைக்கப்படும் யோகராஜா நிரோஜன், கரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுரேந்திர ராஜா, கிரி என அழைக்கப்படும் கனகரத்தினம் ஆதித்யன் ஆகிய விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மூவருக்கும் எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள துண்டுபிரசுரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு