Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஒருவரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

ஒருவரின் உயிரை காப்பாற்றிய ஸ்மார்ட் வாட்ச்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இங்கிலாந்தில் நபர் ஒருவரின் உயிரை ஸ்மார்ட் வாட்ச் காப்பாற்றி உள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஸ்வான்சியின் மோரிஸ்டன் பகுதியில் வசித்து வருபவர் பால் வாபம். இவர் ஹாக்கி வேல்ஸ் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்துவரும் நிலையில், இவர் தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில்தான் அவர் வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு சென்றபோது அவருக்கு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்தில் விழுந்ததையடுத்து அவர் தனது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் மனைவி லாராவுக்கு தகவலை கூறினார். அவரது மனைவி அங்கிருந்து சிறிது தொலைவிலேயே இருந்தார்.

இதையடுத்து அவர் விரைந்து வந்து கணவர் பால் வாபம்மை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு பரிசோதனை செய்து பார்த்தனர்.

அப்போது இதயத்துக்கான ரத்த குழாயில் அடைப்பு இருப்பதும், அதனால் மாரடைப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த அடைப்பை சரிசெய்வதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது அவர் நலமாக உள்ளதுடன், தனக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது என்ன நடந்தது? என்பது பற்றி பால் வாபம் கூறியுள்ளார்.

நான் வழக்கம்போல் காலை 7 மணிக்கு நடைப்பயிற்சிக்கு சென்றேன். அப்போது மார்பு பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டது. இந்த வேளையில் எனது ஸ்மார்ட் வாட்ச் மூலம் மனைவி லாராவுக்கு போன் செய்து வரவழைத்து உயிர் பிழைத்தேன். ஸ்மார்ட் வாட்ச் இல்லாவிட்டால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும் என பால் வாபம் கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு
செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிக்க ரூ.1000 மில்லியன் ஒதுக்கீடு

July 24, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; பெருமளவு பொருட்கள் கைப்பற்றல்!

July 24, 2026
இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்
காணொளிகள்

இந்த ஜெ ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாச, காமினி ஜய விக்ரம எல்லோரும்சேர்ந்து தமிழ் மக்களை அழித்தார்கள்-அமைச்சர் சந்திரசேகர்

July 24, 2026
EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

EPF சேவைகள் இரு நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தம்; தொழில் திணைக்களம் அறிவிப்பு!

July 24, 2026
திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது
செய்திகள்

திருகோணமலையில் ரூ.2.5 கோடி பெறுமதியான ‘ராவண கல்’ விற்பனை முயற்சி; இருவர் கைது

July 24, 2026
ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

ஜப்பான் நிதியுதவியில் 7 புதிய மெட்ரோ பஸ்கள் இலங்கைக்கு வருகை!

July 24, 2026
Next Post
மட்டக்களப்பில் வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பில் வியாபார நிலையங்கள் சுற்றிவளைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு