குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
சற்றுமுன்னர், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்றும் அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.