Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காஸா- இஸ்ரேலிய போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கொழும்பிலுள்ள ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு!

காஸா- இஸ்ரேலிய போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கொழும்பிலுள்ள ஐ. நா காரியலயத்தில் மகஜர் கையளிப்பு!

3 years ago
in செய்திகள்

பலஸ்தீன், காஸாவில் மனிதாபிமானமாற்ற முறையில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் கையெழுத்துக்களை பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இஸ்ரேல், பலஸ்தீனத்தில் மனிதாபிமானமில்லாத வகையில் முன்னெடுத்து வரும் மனித படுகொலையையும், கொடுர தாக்குதல்களையும் உடனடியாக தடுத்து நிறுத்தி அமைதியையும், சமாதானத்தையும் நிலைநிறுத்த ஐ.நா பாதுகாப்பு சபை தலையிட வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தே இந்த மகஜர் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிரிசேன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சி தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரும் இன பேதங்களுக்கு அப்பால் கையெழுத்திட்டுள்ளனர்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமானோர்களின் கையெழுத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த மகஜர் இன்று காலை 11.00 மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள ஐ. நா அலுவலகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். பௌசி, எம். எஸ். தௌபிக் உட்பட இந்நாள் மற்றும் முன்னாள் எம்பிக்கள், பிரமுகர்களின் பிரசன்னத்துடன் ஐ.நா அலுவலகத்தில் வைத்து ஐ.நா அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு!

October 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம்; உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

October 23, 2026
ஆசிரியை மற்றும் மகனை சித்திரவதை செய்த NPP தவிசாளர் உட்பட 5 நபர்களுக்கு பிணை
செய்திகள்

ஆசிரியை மற்றும் மகனை சித்திரவதை செய்த NPP தவிசாளர் உட்பட 5 நபர்களுக்கு பிணை

October 23, 2026
யாழில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அடாவடி குழு கைது
செய்திகள்

யாழில் வட்டிக்கு பணம் கொடுக்கும் அடாவடி குழு கைது

October 23, 2026
எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்
செய்திகள்

எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டும்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர்

October 23, 2026
தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!
செய்திகள்

தலவாக்கலையில் அதிர்ச்சி சம்பவம்; 16 வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகத் தந்தை கைது!

October 23, 2026
Next Post
சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு; ‘டிக்டாக்’ இற்கு தடை!

சமூக நல்லிணக்கத்திற்கு தீங்கு; ‘டிக்டாக்’ இற்கு தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு