நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தின் உயர் அழுத்த ஹீட்டர் அமைப்பு திடீரென செயலிழந்ததன் காரணமாக நேற்று (17) இரவு முதல் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை விசேட அறிக்கை ஒன்றை விடுத்து குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாக மின்சார விநியோகம் தடைபடாது, இந்த பராமரிப்பு காலத்தில் அதிகபட்சமாக நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் எரிவாயு மற்றும் நீராவி விசையாழி நேற்று (17) முதல் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 6 வார பராமரிப்புக்காக ஆலை மூடப்படும்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் 165 மெகாவாட் திறன் கொண்டது மற்றும் நப்தா எரிபொருளில் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.