மே மாதத்தில் புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கூட்டமொன்றில் கலந்துகொண்டபின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு
பதிலளித்துள்ளதுடன் அவ்வாறு தம்மால் உருவாக்கப்படவுள்ள கட்சிக்கு ‘எக்சத் ஜனரஜ பெரமுன’ என்று பெயரிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.