மாவத்தகம பொலிஸ் வீதித் தடுப்பில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அந்த வீதியில் பயணித்த வேன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையைச் சுட்டிக்காட்டி இவ்வாறு புத்தர் சிலை வைப்பது தவறெனக் கூறி சாரதிக்கு எதிராகக் குற்றச்சீட்டு வழங்குவதைத் தவிர்ப்பதற்காக ஒரு லீற்றர் பெற்றோலை எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக கூறப்படும் நபர் தனது பெயரை குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் தகவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த நபர் கடந்த 17ஆம் திகதி குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக கண்டியில் இருந்து தனது பிள்ளைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது பொலிஸாரின் வீதித் தடையில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட போதே இந்தச் சம்பவத்துக்கு முகங்கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ள தகவலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.