தமிழீழத் தேசியக்கொடி நாள், வெகு விமரிசையாக தமிழீழத்தின் தேசியக்கொடி பட்டொளி வீசிப்பறக்க பிரித்தானியாவின் லண்டன் மாநகரின் மையப்பகுதியில் தமிழர்களின் கலாச்சார பெருமையாக நடந்தேறியது.
இந்த வருட தமிழீழத் தேசியக்கொடி நாளானது 21/11/2023 ஆக இருந்த போதிலும் பாடசாலை சிறார்களையும் இளையோர்களையும் அரவணைத்து அவர்களும் பங்கெடுக்கும் விதமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (19/11/2023) நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலக வரலாற்று மையத்துடன் இணைந்து அனேகமான தமிழ் மக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக வரலாற்று மைய முக்கியஸ்தர்கள், பாலா மாஸ்டர் மற்றும் councillor திரு பரம் நந்தா கலந்து கொண்டு சிறப்பிக்க நடந்தேறியது.
தமிழீழ தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் திரு கலாநிதி சொக்கலிங்கம் யோகலிங்கம் அவர்கள் பெரும் பவனியாக Trafalgar Square north terrace ல் தொடங்கி Trafalgar Square மையப்புள்ளியான நிகழ்வு மேடையை band வாத்தியங்கள் முழங்க கொண்டுவந்தார்.
சிறுவர்களின் கலாச்சார நடனங்களுடனும் பேச்சுக்களுடனும் நடைபெற்ற நிகழ்வானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் இருந்து நேரலையில் தொடர்பு கொண்டு சிறப்புரையாற்றினார்.
இறுதியாக உறுதி உரையுடன் உலக வரலாற்று மைய பொறுப்பாளர்களிடம், வரும் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வில் ஏற்றுவிக்கப்பட ஒப்படைக்கப்பட்டது.