நாடாளுமன்றில் இன்று(21) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருந்த நிலையில், அவர் அருகில் வந்த சனத் நிஷாந்த அவர் கையில் இருந்து கோப்புக்களைப் பறித்துச் சென்றதால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.
இதன்போது அங்கு ஒன்று திரண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமையால் சபை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாடாளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டிருந்ததுடன் சிறிது நேரம் கழித்து சபை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.