மட்டக்களப்பு குமாரபுறத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று ரயிலில் மோதுண்டு பலியான சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட தொடருந்திலேயே மோதுண்டு இவர் பலியாகியுள்ளதுடன், குறித்த நபர் அதே ஊரை சேர்த்த சரண் என்னும் பெயருடைய 23 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன் ஒரு குழந்தையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.