“அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி” எனத் தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை கலாசார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விமர்சித்துள்ளார்.
இன்றைய தினம் (01.04.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி. நீங்கள் கடந்த காலங்களில் மட்டக்களப்புக்கு வந்த பொழுதும் குசலானமலையில் வைத்துத் தடுத்து அனுப்பப்பட்டமையால் தான் இன்றும் குசலானமலையிலே சைவசமய வழிபாடுகள் செய்கின்றோம்.
இந்த தொல்பொருள் திணைக்களத்தினை வைத்து நீங்கள் இந்த நாட்டுக்குள்ளே மீண்டுமொரு குழப்பத்தை ஏற்படுத்தத்தான் முயற்சித்திருக்கின்றீர்கள்.
வெடுக்குநாறி மலையில் ஒரு குழப்பம், குருந்தூர் மலையில் ஒரு குழப்பம், குசலானமலையில் ஒரு குழப்பம், அரசிமலை என்று கூறி திருகோணமலை புல்மோட்டையில் ஒரு குழப்பம்.
இந்த நாட்டினுடைய IMF இல் இருந்து ஒப்பந்தம் வந்தாலும் சரி எது வந்தாலும் சரி உங்களைப்போல இன வாதி அமைச்சர்கள் இந்த தொல்பொருள் திணைக்களத்தை வைத்து வடக்கு – கிழக்கிலே எங்களுடைய காணிகளைச் சுவீகரிக்க செய்வது தான் எங்களுடைய பிரச்சினை எனத் தெரிவித்துள்ளார்.