Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? இருவர் விண்ணப்பிப்பு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார்? இருவர் விண்ணப்பிப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான போட்டித் ஆரம்பமாகியுள்ளது.

அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர் மாவை சேனாதிராஜா வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியிலிருந்து விலகக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையால் இப்போட்டி நிலைமை உருவாகியுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அடுத்த தலைவருக்கான தெரிவிற்கு கட்சி யாப்பிற்கேற்ப எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சார்பில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த கட்சியின் மாநாட்டிற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் தலைவராக தேர்வு செய்ய எண்ணுபவரை கட்சியின் நிரந்தர உறுப்பினர்கள் 6 பேரிற்கு குறையாதோர் ஒப்பமிட்டு முற்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும்.

இதனால் தேர்வாக விரும்புபவர்களின் பெயரை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்குமாறு சகல தொகுதிக் கிளைகளிற்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டிற்கு அமைய தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை பரிந்துரைத்து 12 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட விண்ணப்பம் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியரிங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் மற்றுமோர் நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறிதரனின் பெயரை பரிந்துரைத்து 6 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் பெயரை வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வேழமாலிதன் உள்ளிட்ட ஆறுபேர் முன்மொழிந்துள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை கட்சியின் சிரேஸ்ட உப.தலைவர் சி.வி.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம், மன்னாரைச் சேர்ந்த தி.பரஞ்சோதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சூ சிறல், குமாரசாமி, திருகோணமலையைச் சேர்ந்த ஜேம்ஸ் சமத்தர், கொழும்புக் கிளையைச் சேர்ந்த இரட்ணவடிவேல் உட்பட 12 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பெயரை முன்மொழிந்துள்ள 12 பேரில் வடக்கு கிழக்கு மாவட்டத்தின் 8 மாவட்டங்களுடன் கொழும்புக் கிளையைச் சேர்ந்த ஒருவரும் ஒப்பமிட்டுள்ளார்.

கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் சம்பந்தர், மாவை சேனாதிராஜா ஆகியோர் வயது மூப்பு காரணமாக கட்சிப் பணியிலிருந்து விலகக்கூடிய சூழலில், அடுத்த தலைமுறை தலைவர்கள் கட்சியை பொறுப்பேற்று எதிர்காலத்திற்கு வழிநடத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்து வருகிறது.

தற்போது தலைவர் பதவிக்கு விண்ணப்பித்த இருவரும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
Next Post
‘மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு’; அமீருக்கு ஆதரவாய் குரல் கொடுத்த சேரன்!

'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு'; அமீருக்கு ஆதரவாய் குரல் கொடுத்த சேரன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.