யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரு தினங்களுக்கு முன் வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் “B” பெறுபேறு எடுத்துள்ளார்.
இதனால் மருத்துவத்துறைக்கு குறித்த பாடசாலையில் அனுமதிக்கமாட்டார்கள் என கூறி மாணவியின் தாயாரும் , சுவிஸ்லாந்தில் உள்ள மாணவியின் சித்தியும் அதிகாலையில் இருந்து கடுமையான முறையில் மாணவி பேசியதாக தெரியவருகின்றது.
இதன் காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தாயும் தந்தையும் சென்ற பின் அறையைப் பூட்டி துாக்கில் தொங்க முற்பட்டதாகத் தெரிவிகிறது.
மாணவியின் செயலைகண்ட பாட்டி, பதறியடித்து கூக்குரல் எழுப்பிய நிலையில் அயலவர்கள், அறையை உடைத்து உள்ளே புகுந்து மாணவியை காப்பாற்றியதாகவும் கூறப்படுகின்றது,