Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்; சுயிந்தன் வேண்டுகோள்!

சித்தங்கேணி இளைஞன் உயிரிழந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள்; சுயிந்தன் வேண்டுகோள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அலெக்ஸிற்கு நீதி வேண்டும் ஆனால் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் துரைராஜா சுயிந்தன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அலெக்ஸிற்கு நடந்த விடயம் உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம், அதற்கு நீதி வேண்டும். இந்த சம்பவத்தை வைத்துக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஏனென்றால் அலெக்ஸிற்கு நீதி வேண்டும் என்பது உண்மையான விடயம் அது வட்டுக்கோட்டை பொலிஸாகவும் இருக்கலாம் அல்லது வேறு எந்த பொலிஸாகவும் இருக்கலாம் இதற்கு நீதி வேண்டும் என்பது கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

இது சம்பந்தமான அரசியல் சார்ந்த சில செயல்பாடுகளை முன்னெடுத்து, ஓரிருவரை வைத்து அரசியல் நாடகம் செய்வதை தமிழ் மக்களாகிய நாங்கள் நிராகரிக்கின்றோம். ஏன் என்று சொன்னால் நானும் கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட ஒரு விடயத்திலே இந்த விடயத்தை தெளிவுபடுத்துகின்றேன்.

உண்மையில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை அரசியலோடு வைத்திருக்க வேண்டும், மக்கள் சார்ந்த விடயங்களை மக்களுக்கு சரியான முறையில் வழிநடத்த வேண்டும். மக்களை பிழையான முறையில் வழி நடத்திக் கொண்டு அரசியல் ரீதியான செயல்பாடுகளை இந்த இடத்தில் கொண்டு காட்டுவது என்பது உண்மையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

உண்மையில் பொலிஸ் குற்றம் செய்திருக்கின்றது, பொலிஸாருக்கு தண்டனை கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது, தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கையாக இருக்கின்றது. அந்தக் கோரிக்கையை நாங்கள் மறுக்கவில்லை, அதற்கான நீதி கட்டாயம் தேவை அந்த நீதிக்காக நாங்கள் போராட வேண்டும்.

ஆனால் அரசியல் சார்ந்த தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களுடைய சின்னங்கள் பொறிக்கப்பட்ட விடயங்களை காட்டி தங்களுக்கு சுயலாப அரசியலை தேடுகின்றவர்கள் உண்மையில் இந்த தமிழ் மக்களுக்காக இப்போது கதைப்பார்கள் நாளைக்கு இருக்க மாட்டார்கள்.

அலெக்ஸ் இறந்த உடன் இந்த இடத்துக்கு யாரும் வரவில்லை அது மன வேதனையான ஒரு விடயம். அந்த இடத்தில் நாங்கள் நின்றிருந்தோம். ஓரிரு பத்திரிகையாளர்களுடன் இரவு எட்டு மணி வரை இவ்விடத்தில் இருந்து இருக்கின்றோம். யாரும் வரவில்லை, தங்களுடைய தேவைகளுக்காக இப்போ வந்து ஒரு வேலை திட்டத்தை செய்கிறார்கள்.

உண்மையில் அலெக்ஸிற்கு இனி வரும் காலத்தில் ஒரு நீதி வேண்டும். அந்த நீதி நீதிமன்றத்தின் ஊடாக கட்டாயம் கிடைக்கும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம், அவர்கள் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு உடனடியாக நடவடிக்கை தேவை என்பதையும் நாங்கள் விரும்புகின்றோம்.

இதில் மக்கள் யாரும் எந்த விடயத்தை கூறினாலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் அரசியல் சார்ந்த விடயங்களை மக்களை வைத்து பாவிக்க வேண்டாம் என்பதை நான் கூறுகின்றேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!
செய்திகள்

ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு; ஈரோஸ் தலைவர் பிரபாகரன்!

August 22, 2026
மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!
செய்திகள்

மட்டக்களப்பில் 74,900 ஹெக்டேயரில் பெரும்போக நெற்செய்கை; உரம், நீர் முகாமைத்துவம் குறித்து விசேட கவனம்!

August 22, 2026
களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!
செய்திகள்

களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ!

August 22, 2026
கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!
செய்திகள்

கல்கிஸ்ஸவில் 2.40 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை; சந்தேகநபர் கைது!

August 22, 2026
ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்
செய்திகள்

ஹாலிஎல தோட்டத்தில் தீ விபத்து; இரு வீடுகள் முற்றாக சேதம்

August 22, 2026
மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்
செய்திகள்

மாகாண சபைகளின் 2026 திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம்

August 22, 2026
Next Post
உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும் பலதரப்பு அணுகுமுறை!

உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தவும், நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்யவும் பலதரப்பு அணுகுமுறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.