கிளிநொச்சி, பாரதிபுரம் கிராமத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில், நேற்று முன்தினம் (04) மாணவர்களுக்கு
வழங்கப்பட்ட பால் பைக்கட் ஒவ்வாமையால் 13 மாணவர்கள் வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டு கிளிநொச்சி
மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் நடைமுறைக்கு ஊடாக, நிறுவனமொன்று பொதியிடப்பட்ட பால் பைக்கற்றுகளை வழங்கியிருந்தது. இதைஅருந்திய பின்னரே, மாணவர்களுக்கு
வாந்தியும் வயிற்றோட்டமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக மாணவர்கள் கிளிநொச்சி
மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு பல வைத்தியர்கள் ஒன்றிணைந்து உடனடியாக சிகிச்சையளித்தனர். மாணவர்கள் எவரும் ஆபத்தான நிலைமையில் இல்லை என
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பால் பைக்கட்டின் மாதிரிகளை கொழும்பில் உள்ள மருத்துவஆராய்ச்சி நிலையத்துக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.