ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பில்கேட்ஸ் ஆகியோருக்கு இடையில் நேற்று (03.12) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
துபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் (COP 28) போது இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது உலகளாவிய சவால்கள் மற்றும் வெப்பமண்டல பிராந்தியத்திற்கு இலங்கை வழங்கக்கூடிய தலைமைத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் விவசாயத்திற்கான தரவு அமைப்புகளை நிறுவுதல் ஆகியவை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அழுத்தமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, உலகளாவிய முயற்சியில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க இலங்கையின் விருப்பத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.