யாழ்ப்பாணம் – கொக்குவிலில் 17 வயது மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும் கொக்குவில் குளப்பிட்டியைச் சேர்ந்த மோகனதாஸ் கிஷோத்மன் என்ற (17 வயது) மாணவனே மின்னழுத்தியினை பயன்படுத்திய வேளை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரியவந்துள்ளது.