திருகோணமலை, திருக்கடலூர்தமிழ் மற்றும் விஜிதபுர சிங்கள ஆகிய கிராம மக்களுக்கிடையில் இன்று மதியம் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது .
அதனை கட்டுப்படுத்தும் முகமாக அங்கு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்படிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பான்மை இனத்தவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கடற்பரப்பில் சிறுபான்மையினர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த மோதலைக் கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததாகவும் , தற்போது நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவத்தில்காயமடைந்த 6 பெரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.