Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வகுப்பறைகளில் விரிசல்; மாணவர்களுக்கு திடீர் விடுமுறை!

வகுப்பறைகளில் விரிசல்; மாணவர்களுக்கு திடீர் விடுமுறை!

3 years ago
in செய்திகள்

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையின் அண்மித்த இரண்டு மூன்று மாடி மற்றும் இரண்டு மாடி கட்டிடங்களில் அமைந்துள்ள பல வகுப்பறைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு தரம் 06, 07, 08, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டிடத்தில் சுமார் 18 வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருவதுடன், அதில் சுமார் எண்ணூறு மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

நேற்று (06) பிற்பகல் பெய்த கனமழையால் கட்டிடங்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை பாடசாலைக்கு வர வேண்டாம் என கட்டிட நிர்வாகத்தினர் வாட்ஸ் அப் செய்தி மூலம் தெரிவித்துள்ளனர்.

குறித்த கட்டிடத்தை அவதானித்த பின்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விசாரணை நடத்தி கட்டிடத்தின் நிலை குறித்து அறிக்கை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைவர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் குறித்த கட்டடத்தில் கல்வி கற்கும் மாணவர்களை மாவில்மட ரிஷிகலா கலைக் கல்லூரி மற்றும் மாவில்மட கல்லூரிக்கு வகுப்புகளை நடத்துமாறு பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி
செய்திகள்

மாட்டைக் காப்பாற்ற முயன்றபோது விபத்து; உழவு இயந்திரம் குளத்தில் கவிழ்ந்து 17 வயது இளைஞர் பலி

September 5, 2026
மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!
செய்திகள்

மின்வெட்டு குறித்து அச்சம் வேண்டாம்; மின்சார விநியோகத்தில் தடையில்லை என அமைச்சர் அறிவிப்பு!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!
செய்திகள்

துறைமுக நகரில் சீனப் பிரஜை கடத்தல்; மேலும் ஒரு சீனக் குடிமகன் கைது!

September 5, 2026
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!
செய்திகள்

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு; புதிய விலைகள் அறிவிப்பு!

September 5, 2026
இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையில் மனித உரிமைகள் நிலை; பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்ய ஐ.நா. வலியுறுத்தல்!

September 5, 2026
Next Post
10 ஆயிரம் கோடி நிதி மோசடி; ஆதாரம் இருந்தால் பதவி விலக தயார் – சஜித் அதிரடி!

10 ஆயிரம் கோடி நிதி மோசடி; ஆதாரம் இருந்தால் பதவி விலக தயார் - சஜித் அதிரடி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு