மருமகளால் கருத்தரிக்க முடியாத நிலையில் தனது மகனுக்காக பேத்தியை பெற்றெடுத்துள்ளார் நான்சி ஹாக் என்ற 56 வயதாகும் தாய். இந்த சம்பவம் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் நிகழ்ந்துள்ளது.
மகனுக்காக நான்சி எடுத்த முடிவும் அதன் பலன்களும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒரு குழந்தையின் வாழ்க்கையில் தாத்தா, பாட்டியின் பங்கு மிகவும் முக்கியமானது.
ஒரு குடும்பத்தில், தாத்தா பாட்டி தங்கள் பேரன், பேத்திகளுக்கு கதைகள் சொல்கிறார்கள், தாலாட்டுப் பாடுகிறார்கள், மாறி மாறி தங்கள் பேரக்குழந்தைகளை மகிழ்விக்கிறார்கள்.
ஆனால் இந்த சம்பவம் இவை அனைத்திலிருந்தும் வித்தியாசமானது.
இந்த பாட்டி தன் பேத்தியை வளர்க்கவில்லை. மாறாக, தன் வயிற்றில் இருந்தே பேத்தியைப் பெற்றெடுத்துள்ளார்.
ஒரு பெண் தன் மகனின் குழந்தைக்கு தாயான கதை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.