எம்பிலிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவியை பாடசாலை வேனில் வைத்து சாரதி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த வேன் சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தனது சிறிய தாயின் பராமரிப்பில் இருந்த சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் பாடசாலை மாணவியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வேன் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.