ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்தி வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்பியது.
ஆதித்யா எல்1 விண்கலமானது பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பா் 2-ஆம் திகதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சூரியனின் முழு வட்டு (Full-disk) புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலமானது, பயணங்களைக் கடந்து சூரியனின் எல்-1 பகுதியில் பயணித்து வருவதோடு, ஆதித்யா விண்கலத்தின் 2-ஆவது ஆய்வுக் கருவி செயல்பாட்டுக்கு வந்ததுள்ளது.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
விண்கலத்திலுள்ள SUIT தொழில்நுட்பக் கருவி சூரியனின் புற ஊதா அலை நீளங்களை புகைப்படும் எடுத்துள்ளது.
மேலும், 200 முதல் 400 நானோ மீட்டர்வரையிலான சூரிய புற ஊதா கதிர்களின் வட்ட அலை நீளங்களையும் படம் எடுத்துள்ளது.
சூரியனின் ஒலி கோளம், குரோமோஸ்பியர் குறித்தான, சிக்கலான வடிவங்களை கூட ஆதித்யா எல்1 படம் தெளிவாக படம் எடுத்துள்ளது.
சூரியனை பற்றிய ஆராய்ச்சிக்கு இந்த புகைபடங்கள் பெரிதும் உதவுமென இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.