சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் கடுமையான மழை பெய்தது.மழை நீர் வெள்ளத்தால் பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கஷ்டப்பட்டு வந்தனர்.
அன்றாட தேவை இல்லாத மக்களுக்கு பலர் உதவியளித்து வந்த நிலையில் நடிகர் விஜய்யின், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்களும் சாப்பாடும் வழங்கப்பட்டது.
மக்கள் சாப்பிடும் போது ஒருவர் விஜய் புகைப்படத்தை வைத்துக்கொண்டு நின்றது சர்ச்சையானது. இதனை அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மற்றும் திரைப்பட விமர்சகரான ப்ளு சட்டை மாறன்என்போர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளனர்.