இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய, டியுப், நீர்க்குழாய், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக்கூடிய கரண்டி, முள் கரண்டி, தட்டுகள், கோப்பைகள், கத்திகள் உட்பட இன்னும் சில பொருட்களுக்கு இந்த கட்டுப்பாடுளதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.