Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவி துஷ்பிரயோகம்; காணொளியாக்கி இணையத்தில் பதிவிட்ட மாணவர்கள் கைது!

மாணவி துஷ்பிரயோகம்; காணொளியாக்கி இணையத்தில் பதிவிட்ட மாணவர்கள் கைது!

3 years ago
in செய்திகள்

பாடசாலை மாணவிகள் மற்றும் உயர்கல்வி படிக்கும் இளம் பெண்களை பலாத்காரம் செய்து, அக்காட்சிகளை ஆபாசமான திரைப்படங்களாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றிய சம்பவம் தொடர்பாக இரண்டு பாடசாலை மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியை சேர்ந்த இரண்டு பாடசாலை மாணவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் அவரது தாயும் கண்டி பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டின் படி, சந்தேகத்தின் பேரில் இரு மாணவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி இருவரில் ஒருவருடன் காதல் தொடர்பு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

காதல் உறவின் போது குறித்த மாணவியின் வீட்டில் வைத்து மாணவி பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிறிது காலத்தின் பின்னர் அந்த காதல் உறவு முறிந்துள்ள நிலையில் மற்றைய மாணவன் இந்த மாணவிக்கு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து அந்த மாணவியும் அவருடன் காதல் தொடர்பினை ஆரம்பித்துள்ளார்.

இந்த தொடர்பின் போது, ​​கண்டியில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி, தனக்கு குடிக்க ஏதாவது கொடுத்ததாகவும், அதன்பிறகு நடந்த எதுவும் தனக்கு நினைவில் இல்லை என்றும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரான மாணவன், மாணவியை நிர்வாணமாக்கி, ஆபாச காட்சிகளை படம்பிடித்து, பலமுறை அதனை காட்டி மிரட்டி, மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு படமாக்கப்பட்ட காட்சிகளை சந்தேகநபரான மாணவன் இணையத்தளம் மற்றும் அவரது நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கு மாணவியின் முதல் காதலனும் உதவியுள்ளதாக விசாரணைகளின் போது மேலும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் குறித்த மாணவர்களை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளின் போது மேலும் பல மாணவிகள் மற்றும் யுவதிகளின் இதே போன்ற பல ஆபாச வீடியோக்களை மாணவன் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மாணவி துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் விடுதியின் உரிமையாளரையும் அதன் முகாமையாளரையும் கைது செய்த பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பாடசாலை மாணவர்களும் கண்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

தொடர்புடையசெய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்
செய்திகள்

தனுஷ்கோடி வழியாக ஊடுருவிய இரு இலங்கையர்கள் கைது; வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில் சந்தேகம்

July 25, 2026
ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை
செய்திகள்

ஹஜ் செலவுக்காக சலுகை அடிப்படையிலான கடன் வழங்க அரசு நடவடிக்கை

July 25, 2026
சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
Next Post
பாடசாலை மாணவர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு