மட்டக்களப்பு சித்தாண்டி உதயம் பாலர் பாடசாலையில் வருடாந்த ஆண்டிறுதி விழா நிகழ்வு மாணவர்களின் கலை நிகழ்சியுடன் நேற்று (18) நடைபெற்றது. கிராம மட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்.கனகசூரியம் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றன.
இதன்போது அதிதிகள் மலர் கொத்து வழங்கி மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர்.மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம், என்பவற்றுடன் ,வரவேற்புரையும் நடைபெற்றது.நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மாணவர்களின் கல்வி தொடர்பாகவும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மாணவர்களது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் அதிகளவு அக்கறை செலுத்தவேண்டும் என உரையாற்றினார்கள்.நிகழ்வில் மாணவர்களின் பேச்சு,நடனம்,குழு நடனம்,வில்லுப்பாட்டு என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட தொழிலதிபரும் சமூக சேவையாளருமான ஆ.மோகேஸ்வரன் மாணவர்களின் கல்வி வளர்சிக்காக ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.இவரது குறித்த சேவை தொடர்பாக பாலர் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.