கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை அடுத்த மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம். விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி ஊடாக திருத்திக்கொள்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (22) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.