தாயக மக்களுக்கு உதவுவதற்காகவென்று பிரான்ஸ் தமிழ் மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி உரிய முறையில் அந்த மக்களைச் சென்றடையும் என்றும் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,
இன்றுவரை நாங்கள் இந்த விடயம் பற்றி கருத்தில் கொண்டு உங்களின் ஆதங்கத்தையும் புரிந்துகொண்டு செயற்படுகின்றோம். நீங்கள் வழங்கிய பணம் சரியான முறையில் அந்த மக்களுக்கு வழங்கப்படும்.
சில தவறான செய்திகள் ‘வட்ஸ்அப்’ குழுமத்தில் வந்திருந்தன.
அவைகளையும் கவனத்தில் கொண்டு சரியான வரைமுறையில் பொதிகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆரம்பத்திலும் தவறுகள் வருவது இயல்பு அதை வர்த்தக சங்கம் சரியான முறையில் கையாண்டு செயற்படுத்தும் என்பது மட்டும் உண்மை மட்டக்களப்பு பகுதிக்கு 10லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு வழங்கப்படும்.
முல்லைத்தீவு மற்றும் வவுனியா கிளிநொச்சி பகுதிகளுக்கு 34 லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு அனைத்து பற்றுசீட்டைகள் உங்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.