நாடளாவிய ரீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
பண்டிகை காலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
பண்டிகைக் காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், டிசெம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு வாகன சாரதிகள் தொடர்பான விசேட நடவடிக்கையை போக்குவரத்து பொலிஸார் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 2,427 பேரும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டிய 232 பேரும், வேகமாக வாகனம் ஓட்டிய 235 பேரும் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடைமுறை தொடர்ந்து இடம்பெறும் நிலையில் அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.