நலிவுற்றுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் மகளிர் அணி தலைவி ப.சுமதி கோரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுங்கள் அத்துடன் அவ்வாறான குடும்பங்களை கிராம மட்டங்களாக தெரிவு செய்யப்பட்டு குழுக்களாக சிறிய கைத்தொழில் நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களாக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் குடும்பங்களை வாழ்வாதார ரீதியாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் இவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே தூர நோக்காக கொண்டு எமது தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு பல்வேறு பட்ட செயற் திட்டங்களை உருவாக்கி வருகிறது என மேலும் தெரிவித்துள்ளார்.