துபாயிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் ஷிரான் பாசிக் என்பவர் பிலியந்தலையில் விஹாரை ஒன்றை நிர்மாணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்குச் சொந்தமான தெஹிவளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்று சட்டவிரோத கட்டுமானம் என தெரிவித்த கடலோர காவல்படை அதிகாரிகள், பொலிஸாரின் உதவியுடன் நேற்று திங்கட்கிழமை (01 ) அதனை அகற்றினர்.
இந்த அனுமதியற்ற கட்டுமானங்களை அகற்றச் சென்ற அரசாங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் அங்கிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.