பெரும்போகத்தில் உரக் கொள்வனவிற்காக விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.
இதற்காக மேலும் 2,000 மில்லியனை திறைசேரியிடமிருந்து கோரியுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.
இந்த நிதி கிடைத்ததும் உடனடியாக அதனை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் கூறியது.
தற்போது வரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 5,000 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது.
583,372 விவசாயிகளுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிலிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்போக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளில் 50 வீதமானோருக்கு மாத்திரமே இதுவரை கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.