Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சூரியனை பற்றி சூடான தகவல்; ஆதித்யா எல்-1 இன் பயணம் இன்றுடன் முடிவு!

சூரியனை பற்றி சூடான தகவல்; ஆதித்யா எல்-1 இன் பயணம் இன்றுடன் முடிவு!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், 125 நாட்கள் பயணத்திற்கு பிறகு, சூரியனுக்கு அப்பால் எல்1 புள்ளியில் இன்று மாலை நிலைநிறுத்தப்படுகிறது. இது 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இஸ்ரோ களம் இறங்கியுள்ளது. இதன் முதற்படியாக, கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஆந்திரப்பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி எக்ஸ்எல் சி57 ராக்கெட் மூலம், ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

அதன் வட்டப் பாதையை உயர்த்துவதற்காக இதுவரை விஞ்ஞானிகள் 4 கட்டப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில், புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சமபுவி ஈர்ப்பு விசை புள்ளியான லக்ராஞ்சியனை நோக்கி ஆதித்யா எல்-1 பயணித்து வருகிறது. 125 நாட்கள் பயணத்திற்குப் பிறகு, இன்று 06 மாலை 4 மணிக்கு அதனை வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொள்கின்றனர்.

சூரியனை பூமி சுற்றிவரும் போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின்தொடரும் வகையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. எனவே, சூரியனில் ஏற்படும் மாற்றங்கள், அதனால் நிகழும் விளைவுகளை முன்கூட்டியே பூமியில் இருந்து அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே சூரியனின் முழு-வட்டுப் படங்களை ஆதித்யா எல்-1, பூமிக்கு அனுப்பி உள்ளது. தொடர்ந்து அறிவியல் சோதனைகளுக்காக சூரியனின் பல்வேறு கோணங்களின் படங்களையும் ஆதித்யா விண்கலம் அனுப்ப உள்ளது. இதனால், விண்வெளியில் உலவும் செயற்கைக்கோள்களை பல்வேறு பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆதித்யா விண்கலனை எல்-1 புள்ளியில் நிலைநிறுத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்படும் பட்சத்தில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு சூரியனை பற்றி பல்வேறு சூடான தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!
செய்திகள்

பெண்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தது!

September 8, 2026
கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!
செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் டிஜிட்டல் வளர்ச்சிக்கு அமெரிக்காவிடமிருந்து 15 மில்லியன் டொலர்!

September 8, 2026
இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!
செய்திகள்

இந்த ஆண்டிற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைகள் பணி ஆரம்பம்!

September 8, 2026
தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!
செய்திகள்

தனியார் துறை ஊழியர்களுக்கு இணையவழி ரயில் பருவகாலச் சீட்டு வசதி!

September 8, 2026
சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!
செய்திகள்

சபாநாயகர் இன்று வெளியிட்ட முக்கிய சட்ட அறிவிப்புகள்!

September 8, 2026
Next Post
திருகோணமலை – கொழும்பு வீதியில் விபத்து; இருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கொழும்பு வீதியில் விபத்து; இருவர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.