ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளது.
இது பல ஆண்டுகளாக தாமதமாகி வருகிறது.
நெருக்கடியைத் தணிக்க நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கும் இடையே இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடல்களால், முறையாக பணிகளைத் தொடங்க முடிந்தது.
அதன்படி, 2023 டிசம்பர் மாதத்திற்கான பணத்தை நிதி அமைச்சு ஒதுக்கியது ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என குறிப்பிட்டுள்ளார்.