குறைந்த வருமானம் பெறும், குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்காக 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாளிகாவத்தை, சுகததாச உள்ளக விளையாட்டரங்கு அருகில், மாதம்பிட்டிய, கொலம்பகே மாவத்தை, நாவல ஆகிய பகுதிகளில் இந்த தொடர்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக, அதன் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.