இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரை தேர்தல் மூலமே தெரிவு செய்வது என்ற முடிவை அந்தப் பதவிக்கு போட்டியிடும் மூன்று போட்டியாளர்களும் எடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் தலைமை பதவிக்கு போட்டியிடும் சி. சிறீதரன், ம. ஆ. சுமந்திரன், சீ. யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் உள்ள சிறீதரன் எம். பியின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதன்போதே அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
நேற்று முன்தினம் சம்பந்தனின் இல்லத்தில் நடந்த செயல்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் தெரிவு பாரம்பரிய முறைப்படி தேர்தலின்றி நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. எனவே, இது
தொடர்பில் மூவரும் கூடிப் பேசி முடிவு எடுப்பதாகவும் – அதற்கு ஒருநாள் அவகாசம் தருமாறும் போட்டியாளர்களில் ஒருவரான சுமந்திரன் எம். பி. செயல்குழுவிடம் கூறியிருந்தார். இதன்பிரகாரம், தலைமைக்கு போட்டியிடும் மூவரும் சிறீதரன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை கூடினர். இதன் போது, சிறீதரன், சுமந்திரன் முடிவை எடுத்தனர்.
இதன்பிரகாரம், தலைமைக்கு போட்டியிடும் மூவரும் சிறீதரன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நேற்று வியாழக் கிழமை கூடினர். இதன் போது, சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் போட்டியிலிருந்து விலக
மறுத்தனர். இதேசமயம் யோகேஸ்வரன் சிறீதரனுக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் தலைவராவதென்றால் போட்டியிலிருந்து விலகுவதாகவும் கூறினார்.
எனினும், சுமந்திரனும் சிறீதரனும் விட்டுக்கொடுப்புக்கு மறுத்த நிலையில், தேர்தலை நடத்துவது என்ற முடிவுக்கு வந்தனர். இதனை கட்சிக்கும் தெரிவித்தனர்.எனவே, எதிர்வரும் 21ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவரை தெரிவதற்கு தேர்தல் நடத்தப்படும். இரகசிய வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தல் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.