மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் வாவியில் மீன்பிடிக்கச் சென்ற கிழக்கு பல்கலைக்கழக மாணவன் இன்று (13) காலை சனிக்கிழமை காணாமல் போயுள்ளாதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
அப்பாவும்,மகனும் மீன் பிடித்துக்கொண்டிருந்த சமயம் தோணி ஆற்றினுள் கவிழ்ந்த நிலையில் தகப்பனார் தெய்வாதீனமாக உயிர்தப்பியதுடன் மகன் ஆற்றில் காணாமல் போயுள்ளார்.
25 வயதுடைய கிழக்கு பல்கலைக்கழக மாணவன் தி.தனுஷன் என்பவரே நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுறது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற களுவாஞ்சிக்குடி பொலிஸார் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.