போக்குவரத்து விதிமீறல் குற்றத்தை மேற்கொண்ட நபரொருவரிடம் காகித கட்டுகளை கையூட்டலாக கோரிய காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
பொல்கஹவெல காவல்துறை பிரிவில் கடமையாற்றும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இலக்கத்தகடு விளக்கு இன்றி வாகனத்தை செலுத்திய குற்றத்துக்காக நபரொருவரின், சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த 2ஆம் திகதி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் குறித்த நபர் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக பொல்கஹவெல காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அதன்போது குறித்த காவல்துறை கான்ஸ்டபிள், அனுமதிப்பத்திரம் மீள கையளிப்பதற்காக காகித கட்டுகளை கையூட்டலாக கோரியுள்ளார்.