பிரித்தானியாவுக்குள் புதிய வகை கோவிட் வைரஸ் மாறுபாடு நுழைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸ் ஒமிக்ரோன் கோவிட் வைரஸின் மற்றொரு துணை வைரஸ் எனவும் Omicron sub-variant XBB.1.16 என்னும் இந்த வைரஸ், Arcturus கோவிட் துணை வைரஸ் என அழைக்கப்படுகின்றது.
இந்த கோவிட் துணை வைரஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளிலும் பரவியுள்ளது.
இந்த வைரஸ் பரவல் காரணமாக முகக்கவசம் அணிதல் போன்ற விதிகளை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கோவிட் துணை வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளாவன, அதிக காய்ச்சல், இருமல், அரிப்பு அல்லது ஊறலுடன் கண்களில் தொற்று அல்லது கண்கள் சிவத்தல் முதலானவை ஆகும்.
மேலும், இந்த வைரஸ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோவிட் வைரஸ்களிலேயே மிக எளிதில் தொற்றக்கூடிய வைரஸ் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த Arcturus வைரஸ், தற்போது பிரித்தானியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு ஏஜன்சி உறுதி செய்துள்ளது.