இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை நிறுவனத்தினால் தொழில் பயிற்சி தொடர்பாக மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக கள உத்தியோகத்தர்களுக்கு விழிப்பூட்டும் வழிகாட்டல்
நிகழ்வு இன்று காத்தான்குடி பிரதேச செயல மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் முகாமையாளர் நலீம் மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அலுவலர்களுக்கு இளைஞர்களை பயிற்சிக்கு இணைப்பது தொடர்பான தெளிவுரைகளை வழங்கினர். காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.