கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி வங்கியை 2023ம் ஆண்டு மூன்று கோடி பதினொரு லட்சம் ரூபா இலாபம் ஈட்டியமைக்கு அதற்காக உழைத்த அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சமுர்த்தி சிரேஸ்ட தலைமையக முகாமையாளர் எஸ்.ஏ.பஷீர் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.ஏ.சி. றமீஸா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.தாஹிர்;, சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி வங்கி 2022ம் ஆண்டு நாட்பது லட்சம் ரூபா நஸ்டத்தில் இருந்த போதும் 2023ம் ஆண்டு மூன்று கோடி பதினொரு லட்சம் ரூபா தேறிய இலாபமாக பெற்றுள்ளது சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களது கடின உழைப்பே இதற்கு காரணம் அதற்காக பிரதேச செயலாளர் என்ற வகையில் தனது நன்றிகளை அனைவருக்கும் தெரிவித்து கொள்வதாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கட்டுப்பாட்டு சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.