Battinaatham பிரதம ஆசிரியர் பயங்கரவாத குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் நேற்று முன்தினம் 18 ஆம் திகதி அழைக்கப்பட்டு,விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
Battinaatham ஊடகத்தின் இணையதளத்திலும், முகநூல் பக்கத்திலும் (Facebook) வெளிவந்த செய்தி தொடர்பாகவே அவர் அழைக்கப்பட்டு அது தொடர்பான விளக்கம் அவரிடம் கோரப்பட்டது. பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து ஒன்றையே battinaatham ஊடகம் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இச்செய்தி தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முற்றுமுழுதான விளக்கம் பிரதம ஆசிரியரால் அளிக்கப்பட்டதோடு, அது தொடர்பான சந்தேகங்களும் தீர்த்து வைக்கப்பட்டன.
இந்த விசாரணையின் போது பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் அவரிடம் கையளிக்கப்பட்டு, அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கேட்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.