கல்முனை தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற தொழில் திணைக்கள உத்தியோகத்தரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உணவகம் ஒன்றில் வைத்து தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு நபர் ஒருவரிடம் ரூபா 10 ஆயிரம் இலஞ்சம் பெற்றுக் கொள்ளும்போது கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே குற்றச்செயல் ஒன்றிற்காக அரச சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு பின்னர் மீள இணைக்கப்பட்டதாக மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.