தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்கம் செய்வதற்காக முதன்முதலாக
பொதுக் கட்டமைப்பு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 19 ஆம் திகதி அன்னைபூபதியின் 35ஆவது நினைவு வணக்க நிகழ்வை நடத்துவதற்கு வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பொதுக்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த பொதுக்கட்டமைப்பில், க.பிரபாகரன்-அன்னை பூபதியுன் புதல்வர், திருமதிலோ.சாந்தி அன்னைபூபதியின் புதல்வி,யா.அரவிந்தன் – அன்னைபூபதியின் பேரன், த.முர சொலிமாறன் குருக்கள், வண
பிதா ஜோசப்மேரி அடிகளார், சபா. சிவயோகநாதன்-சிவில் சமூக செயல்பாட் டாளர், இ.
செல்வகுமார்-சிவில் சமூக செயல்பாட்டா ளர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் அன்னை பூபதியின் 35, வது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு உணர்வுபூர்வ மாக இடம்பெறவுள்ளது.19ஆம் திகதி மு.ப.09, மணிக்கு மாமாங்கப்பிள்ளையார்
ஆலயத்தில் பூசை வழிபாடு திதி ஆராத னைகளும் அதனை தொடர்ந்து அன்னதானமும் பின்னர் பி.ப 04, மணிக்கு திருச் செந்தூர் முருகன் ஆலயத்தில் இருந்து நாவலடி அன்னைபூபதியின் கல்லறையில் சென்று
பி.ப.05, மணிக்கு நினைவு வணக் கம் செலுத்தப்படும் என “தியாக தீபம் அன்னைபூபதி நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு” அறி வித்துள்ளது.