கொழும்பின் பல்வேறு வீதிகள் சிசிடிவி மூலம் நேற்று (22) கண்காணிக்கப்பட்டு, 125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சிசிடிவி கேமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னோடி திட்டம் நேற்று தொடங்கியது.
கொழும்பைச் சுற்றியுள்ள CCTV மூலம் 125 போக்குவரத்து விதிமீறல்கள் இனங்காணப்பட்டதாகவும், ஆரம்ப கட்ட நடவடிக்கையாக அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இங்கு இனங்காணப்பட்ட பிழைகளில் பிரதானமாக பாதையை மாற்றியமை மற்றும் நிறுத்த வேண்டிய பகுதியில் நிற்காமல் செல்லுதல் போன்ற தவறுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.