முருகப்பெருமானின் விரதங்களில் சிறப்பிடம் பெறுகின்ற தைப்பூசத் திருநாள் இந்துக்களால் உலகளாவிய ரீதியில் இன்று (25) கொண்டாடப்படுகின்றது.
தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் கூடிய நாள் தைப்பூசத் திருநாளாகும்.
முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக பழனியில் தனித்து நின்றபோது அசுரர்களை அழிப்பதற்காக அன்னை பராசக்தி ஞானவேல் அருளிய நாளாக தைப்பூசம் விளங்குகின்றது.
முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் இடம்பெறுவதுடன், பக்தர்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.