பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.நயினாதீவு நாக பூசனி அம்மன் ஆலயத்தை பிரதபலிக்கும் விதமாக தீவகத்தின் நுழை வாயிலான பண்ணை சுற்றுவட்டத்தில் புதுவருட தினத்தன்று அம்மன் சிலை வைக்கப்பட்டது. இந்த வழக்கு நாளை செவ்வாய்க் கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலையில் அம்மன் சிலை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நல்லை ஆதீன குருமுதல்வர் தலைமையில் நடைபெறும் இந்தக் கலந்துரையாடலில் அனைத்து இந்து சமய அமைப்புகள், ஆலய அறங் காவலர்கள் மற்றும் சைவ அபிமானிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.