புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்த நிலையில் வெற்றிடமாகியுள்ள அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட சனத் நிஷாந்த உள்ளிட்ட ஐந்து பேர் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியிருந்தனர்.
தேர்தலில் சனத் நிஷாந்த அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று நாடளுமன்றம் சென்றிருந்தார்.
இந்நிலையில் தற்போது சனத் நிஷாந்த உயிரிழந்தமையை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பாக புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 06ஆவது இடத்தைப் பெற்ற எல்.கே. ஜெகத் பிரியங்கர நியமிக்கப்படுவார்.
அதேவேளை தற்போது விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணயில் இணைந்து அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவராக ஜெகத் பிரியங்கர பதவி வகித்து வருகின்றார்.
இதன் காரணமாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படும் போது, எதிர்க்கட்சிப் பக்கம் அமர்வார் என எதிர்பாக்கப்படுகிறது.