கடந்த காலங்களில் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட கைதிகளுக்கிடையில் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் சிலர் உள்ளதாகவும் அவர்கள் அவ்வப்போது வன்முறைகளை தோற்றுவிக்கின்றமை அம்பலமாகியுள்ளதாகவும் தகவல் வௌியாகியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறினார்.
இந்த விடயம் தெரியவந்ததுள்ள நிலையில், கைதிகளுக்கிடையில் உள்ள போதைப்பொருள் கடத்தற்காரர்களை அடையாளங்கண்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையானர்கள் என கூறப்படும் சுமார் 300 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 22 முதல் 36 வயதுக்கிடைப்பட்ட சுமார் 100 பேர் அடங்குவதுடன், இவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல சந்தர்ப்பங்களில் மோதல்களை உருவாக்கியுள்ளதாகவும் இதனால் புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
மேலும் போதைக்கு அடிமையான 36 வயதிற்கு மேற்பட்ட 200 பேர் கைது செய்யப்பட்டு, சேனபுர புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.