Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும்; நாளை ஆரம்பமாகும் பாதயாத்திரை தொடர்பில் உமாச்சந்திர பிரகாஷ்!

இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும்; நாளை ஆரம்பமாகும் பாதயாத்திரை தொடர்பில் உமாச்சந்திர பிரகாஷ்!

3 years ago
in முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரை யாழ்ப்பாணம் உட்பட ஐந்து நகரங்களில் இருந்து நாளையதினம் புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் இதனை தெரிவித்ததுடன், இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும் என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நாளை 19 ஆம் திகதி யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ இடம்பெறவுள்ளது.

வட பகுதிக்கான யாத்திரை காலை நல்லூர் ஆலய வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமாகும்.

யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிப்பு இடம்பெற்று கிளிநொச்சி, வவுனியா என யாத்திரை செல்லவுள்ளது.

முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து நாளை ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21 ஆம் திகதி கொழும்பை சென்றடையும்.

இதன் இறுதி நிகழ்வில் நாட்டின் பல உண்மைகள் தெரியவரும்.

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யும் பாசத்திற்கான யாத்திரையில் ஐக்கிய மக்கள் சக்தியும் கைகோர்க்கிறது.

இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கோருவதே இந்த யாத்திரையின் முக்கியமான நோக்கம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ரயில் மோதி பல்கலைக்கழக மாணவன் மரணம்!

ரயில் மோதி பல்கலைக்கழக மாணவன் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு